அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 22.02.2022

#Rasipalan #Dailyrasipalan #Todayrasipalan
Reha
3 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 22.02.2022

மேஷம்:

எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் மடல் மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியமொன்று இனிதே முடியும். வழக்குகள் சாதகமாகும். உத்யோக முயற்சி கைகூடும்.

ரிஷபம்:

கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். உடல் நலத்தில் இருந்த சோர்வுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.

மிதுனம் :

நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பிறர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.

கடகம்:

தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். உறவினர் பகை மாறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

சிம்மம்:

அஞ்சல் வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.

கன்னி:

எடுத்த காரியங்கள் எளிதில் வெற்றி கிட்டும் நாள். செல்வநிலை உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். புண்ணிய காரியங்களுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள்.

துலாம்:

கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

முன்னேற்றம் கூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். தொலைபேசி வழியே தொழில் முன்னேற்றம் தகவல் வந்து சேரும்.

தனுசு:

பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலத்தில் சிறுஇடையூறுகள் ஏற்பட்டு அகலும்.

மகரம்:

வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி எடுக்கும் நாள். நண்பர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர். வெளிநாட்டுப் பயணம் விரும்பியபடியே கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும்.

கும்பம்:

சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பப் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடக்க முற்படுவீர்கள். உத்தியோக நலன்கருதி பயணமொன்றை மேற் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்:

உணர்ச்சிவசப்படுதவன் மூலம் உறவுகள் பகையாகும் நாள். சிரித்துப்பேசும் நபர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!