லலித் கொத்தலாவல வீட்டுக்காவலில்.. பலகோடி கொள்ளையடிக்க அவரை கொலை செய்ய சதித்திட்டம்
Prathees
3 years ago

பலகோடி சொத்துக்களை கொள்ளையடித்த பிரபல வர்த்தகரான லலித் கொத்தலாவலவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கோல்டன் கீ வைப்பாளர்கள் நீதி சங்கம் தெரிவித்துள்ளது.
லலித் கொத்தலாவலவை பலவந்தமாக தடுத்து வைத்திருக்கும் குழுவே இந்த சதியை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் மார்கோ பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொத்தலாவல தற்போது வீட்டுக்காவலில் இருப்பதாகவும்இ ஒரு குறிப்பிட்ட கும்பல் அவரது மனைவியிடமிருந்து பிரித்து வைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.



