மெக்சிகோவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பறவைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.!
#world_news
#Mexico
#Birds
Mugunthan Mugunthan
3 years ago

மெக்சிகோ நாட்டின் சிகாகுகா நகரில் பறவைகள் மர்மமான முறையில் இறந்த நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கழுத்தில் மஞ்சள் நிறத்திலும், பிற பகுதிகளில் கருப்பு நிறத்திலும் கானப்படும் ஒரு வகை பறவைகள் திடீரென அங்குள்ள சாலைகளில் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன.
அவை திடீரென கூட்டமாக சாலைகளில் விழுந்து இறந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கனடாவில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வந்தபோது இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் எதனால் இறந்தது என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



