அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 08.02.2022

மேஷம்:
அசுவினி: குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் மறைந்து சுமுக உறவு உண்டாகும்.
பரணி: குழந்தைகளின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டு பெறுவர்.
கார்த்திகை 1: வீண் அலைச்சல் குறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: காலையிலேயே மனதிற்கு இனிய நிகழ்ச்சி நடக்கலாம்.
ரோகிணி: கவலை குறையும். நண்பர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்.
மிருகசீரிடம் 1,2: வழக்குகள் சாதகமாக முடியும். பரபரப்பு அதிகரிக்கும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பொதுத் தொடர்புகள் விரிவடையும். யோகமான நாள்.
திருவாதிரை: நியாயமான வழியிலும், மனசாட்சிபடியும் செயல்படுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: அலுவலக வழக்குகளில் நல்லதொரு திசைத் திருப்பம் ஏற்படும்.
கடகம்:
புனர்பூசம் 4: கணவன் மனைவி இணைந்து நிதி பற்றி தீர்மானிப்பீர்கள்.
பூசம்: தள்ளிப்போட்ட வேலைகளை இன்று முடித்து நிம்மதி காண்பீர்கள்.
ஆயில்யம்: பெரியோர், உயர் அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும்.
சிம்மம்:
மகம்: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நல்ல எண்ணங்கள் வரும்.
பூரம்: மாலையில் அலைபேசி மூலம் வரும் செய்தி மகிழ்ச்சி தரும்.
உத்திரம் 1: கவனக்குறைவால் பிரச்னை ஏற்படாதபடி எச்சரிக்கை தேவை.
கன்னி:
உத்திரம் 2,3,4: யாருடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்
அஸ்தம்: பிறரிடம் வாக்குவாதம் செய்யாதிருந்தால் மன உளைச்சல் வராது.
சித்திரை 1,2: புகழ் மிக்கவர்களைத் தொடர்பு கொண்டு மகிழ்வீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4: வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பர்.
சுவாதி: சூழ்நிலை அறிந்து பிறருக்கு விட்டுக் கொடுப்பீர்கள். பிரச்னை தீரும்.
விசாகம் 1,2,3: வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். கலகலப்பான நாள்.
விருச்சிகம்:
விசாகம் 4: பணியிடத்தில் உயர் அதிகாரியை அனுசரித்து செல்வது நல்லது.
அனுஷம்: வீடு தொடர்பான பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும்.
கேட்டை: இன்று இனிய செய்தி ஒன்று வந்து உங்களை மகிழ்விக்கும்.
தனுசு:
மூலம்: வெளிவட்டாரத்தில் புதிய சந்திப்பு பற்றி கவனம் தேவை.
பூராடம்: ஆன்லைனில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
உத்திராடம் 1: சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். உறவினர் தொடர்பு கொள்வர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்பத்தினரின் விருப்பத்திற்கேற்ப செயல்படுவீர்கள்.
திருவோணம்: வழக்கத்துக்கு அதிகமாக உழைக்கத் தொடங்குவீர்கள்.
அவிட்டம் 1,2: சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
சதயம்: பணியிடம் அல்லது கட்சியில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: உங்களின் மதிப்பு உயர்வதால் மனதில் மகிழ்ச்சி நிலவும்.
மீனம்:
பூரட்டாதி 4: பல நாளாக எதிர்பார்த்த உயர்வும் நன்மையும் வரும்.
உத்திரட்டாதி: எதிர்காலத்துக்கு உதவக்கூடிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
ரேவதி: பணியிடத்தில் பாராட்டின் அடையாளமாக உங்களுக்கு சிறு நன்மை வரும்.



