இளம் வீரர்களை பின்னுக்கு தள்ளி.. 2-வது முறையாக உலக சாதனை..!!!!
Keerthi
3 years ago

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் அலைசறுக்கு போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமான இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதில் கெல்லி ஸ்லேட்டர் என்ற வீரர் அனைத்து வீரர்களையும் பின்னுக்குத்தள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் கடந்த 1992-ஆம் ஆண்டில் தனது 20-வது வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இவர் இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற சாதனையை படைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து தற்போது கெல்லி ஸ்லேட்டர் அலை சறுக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் வயதான வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ராட்சத அலைகளுக்கு பெயர் பெற்ற பான்ஜாய் பைப்லைன் கடல் பகுதியில் கெல்லி ஸ்லேட்டர் சீறிப்பாய்ந்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.



