குருந்தூர்மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர்கள் - சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்

Reha
3 years ago
குருந்தூர்மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட  அமைச்சர்கள் - சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்

அரச நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தமிழர் பகுதிகளில் சில சட்டவிரோத செயற்பாடுகளை அமைச்சர்களும் பௌத்த பிக்குகளும் மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரையில் 40 இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் அமைச்சர்கள் பிரித் ஓதல் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் குமுளமுனை - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைக்கு நேற்று முந்தினம் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோர்  திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!