மனிதர்களை மற்ற முடியாது - காதல் விதிகள் - பாகம் - 5

#Love #Article #Tamil People
மனிதர்களை மற்ற முடியாது - காதல் விதிகள் - பாகம் - 5

மனிதர்களை மற்ற முடியாது

உங்களால் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவரையோ அல்லது கால்ப்பந்து வெறியரையோ , வேலை பைத்தியத்தையோ , கூச்ச சுபாவம் உள்ளவரையோ , அல்லது சுலபமாக பதற்றமடைய கூடியவரையோ மாற்றவே முடியாது .

அதனால் இதுபோன்ற குணங்கள் உடையவர்களோடு உங்களால் வாழ முடியாது என்று தோன்றினால் , முதலில் காதலிக்கவே வேண்டாம் . இப்போது அவரை ஓரளவு சகித்து கொள்ள முடியும் பரவாயில்லை பின்னால் நான் அவரை மாற்றி விடுவேன் என்று நினைத்து கொண்டு யாரையும் காதலிக்க ஆரம்பிக்க வேண்டாம் . உங்களால் அது முடியவே முடியாது . நீங்கள் இருவர் வாழ்வையும் சேர்த்து கெடுத்துவிடுவீர்கள் .

யாரும் உத்தமர் இல்லை . காதலில் எல்லாரும் ஒவ்வொரு சமயத்தில் எரிச்சல் தருபவர்களாகவே இருப்பார்கள் . உங்களால் தாங்கி கொள்ள கூடிய எரிச்சல் தரும் பழக்கங்கள் உடையவரைதான் நீங்கள் தேடுகிறீர்கள் . உங்கள் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப மாறிக்கொள்பவரை நீங்கள் தேடவில்லை .

இது போன்ற குணம் இன்னும் பெரிய விஷயங்களும் பொருந்தும் . அது இன்னும் உங்களை துக்கத்தில் ஆழ்த்துவதாக இருக்கலாம் . நீங்கள் உத்தமமான ஒருவரை சந்திக்கலாம் . அதே சமயம் அவர் பெரிய குடிகாரனாகவோ, மனைவியை உதைப்பவனாகவோ , மிகப்பெரும் ஏமாற்றுக்காரனாகவோ இருக்கலாம் . இந்த குணங்களை உங்களால் மாற்றவே முடியாது . அதனால் , உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் .