இன்றைய வேத வசனம் 02.02.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
இன்று மாமிசம் அநேகரை மயக்கி வைத்ததினால், மாம்சத்தில் மயங்கி அநேக வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாம் உலகத்தின் அசிங்கங்களுக்கும் அருவருப்புகளுக்கும் விலக்கி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், Cinema, P**n graphy, internet என்கிற பாவங்களுக்கு இன்றய இளைய தலைமுறையினர் அடிமையாகி, தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள்.
அருமையான வாலிபர்களே இந்தப் பாவங்கள் உங்களைக் கொஞ்சம், கொஞ்சமாக ஆட்கொண்டு, இறுதியில் உங்களை முழுவதுமாக அடிமையாக்கி உங்கள் ஆத்துமாவை நரகத்துக்கு நேராக கொண்டு சென்றுவிடும்!
சாதாரணமான ஒரு காரியத்தை சொல்லுகிறேன். கொதிக்கும் தண்ணீரில் ஒரு தவளையை தூக்கிப் போடுங்கள் அது உடனடியாக குதித்து வெளியே வந்துவிடும்.
ஆனால், அந்த தவளையை சாகடிக்க வேண்டுமானால், குளிர்ந்த தண்ணீரில் அந்த தவளையை தூக்கிப் போட்டு அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சூடுபடுத்தும் போது அந்த தவளை அந்த சூட்டை உணராமல் அப்படியே இறந்துவிடும்.
அதேபோலதான் உன் மாமிசத்தை எப்படி தட்டிவிட வேண்டும் என்று சாத்தானுக்கு தெரியும். உன் மாம்சத்தின் இச்சை களை எப்படி தட்டிவிட வேண்டும் என்று சாத்தானுக்கு மிக நன்றாகவே தெரியும்!
உன் ஆத்துமாவுக்கு விரோதமாகவ போராடும் மாம்சத்தை எப்படி தட்டிவிட வேண்டும் என்று சத்துரு நன்றாகவே அறிவான் என்பதை மறந்துவிடாதே.
அது ஒரு tv serial ஆக இருக்கலாம், ஒரு cinema இருக்கலாம், ஒரு P**n graphy ஆக இருக்கலாம், ஒரு தவறான Phone call ஆக இருக்கலாம், அல்லது ஆபாசமான ஒரு Chat ஆக கூட இருக்கலாம்.
அருமையான வாலிபர் சகோதர, சகோதரியே, இந்தப் பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உன் ஆத்துமாவுக்கு விரோதமாக போராடி, உன்னை முழுவதுமாக அழித்து உன் எதிர்காலத்தை சீரழித்து உன்னை நரகத்திற்கு நேராக இழுத்து சென்று விடும் என்பதை மறந்து விடாதே!
இந்த மாம்சம் மயக்கம் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அறிவுள்ள வாழ்க்கையாக தொடங்கியிருந்தாலும், ஆத்தும பாரம் நிறைந்த ஒரு வாழ்க்கையாக தொடங்கி இருந்தாலும், இந்த பாவம் உங்களை குருட்டாட்டம் பிடிக்க வைத்து உங்களை சீரழித்து விடும் என்பதை உணர்ந்தபடியால் மிகவும் பாரத்துடன் இந்த செய்தியை எழுதுகிறேன்! மனமே செவிகொடு!
கலாத்தியர் 5:16
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.



