அனுரகுமார பயணித்த கார் மீது முட்டை தாக்குதல்

Prathees
3 years ago
அனுரகுமார பயணித்த கார் மீது முட்டை தாக்குதல்

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில்  அனுரகுமார திஸாநாயக்கவின் கார் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 இதனையடுத்து கட்சியினரால் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாடு இன்று பிற்பகல் கலகெடிஹேன தனியார் விழா மண்டபத்தில் நடைபெற்றது.

மாநாட்டின் போது, ​​கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, விழா நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​விழா மண்டபத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் முட்டையால் தாக்கப்பட்டார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும்  நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுடன் சுமார் 16 பேர் வந்துள்ளதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர். ஏனையோர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!