யாழில் பஸ் சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பலி

Prathees
3 years ago
யாழில் பஸ் சில்லில் சிக்குண்டு  பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சற்று முன் நடந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நொக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் ஏ-9 வீதி நாவற்குழி பகுதியில் பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளார்.

அங்கு இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த மண் பிட்டியில் கால் வைத்த போது கால் தடுமாறி வீதியில் விழுந்துள்ளார்.

குறித்த பெண் வீதியில் விழுந்ததை கவனிக்கத குறித்த பஸ் அங்கிருந்து புறப்பட்டது.

இதன்போது வீதியில் விழுந்த பெண்ணின் தலை பஸ்ஸின் பின் பக்க சில்லில் நசிவுண்டது.

உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட பெண் பட்டா ரக வாகனத்தின் உதவியுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் சாவகச்சேரி வைதிய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!