உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற என்ன செய்ய வேண்டும் ?

#spiritual #Home #Holy sprit
உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற என்ன செய்ய வேண்டும் ?

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கனவுகளும், ஆசைகளும் இந்த உலகத்தில் உண்டு. நம்முடைய ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், ஆசைகள் இருப்பது மட்டும் ஒன்றாக இருக்கிறது. ‘எனக்கு ஒரு ஆசையும் இந்த வாழ்க்கையில் இல்லை’ என்று யாராலும் சொல்ல முடியாது. ஏதோ ஒரு கனவை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு, உங்களுடைய கனவு உடனே நிறைவேற இந்த ஒரு பொருளுடன் இறைவனை நினைத்து இப்படி ஒரு பேப்பரில் எழுதி வைத்துப் பாருங்கள்.

வாயால் உச்சரிக்கும் மந்திரத்திற்கும், கையால் எழுதும் வார்த்தைகளுக்கும் அதிக மதிப்பு உண்டு. இதன் அதிர்வலைகள் ஒருவித நேர்மறை ஆற்றல்களை பெருகச் செய்யும். இந்த நேர்மறை ஆற்றல் நம் கனவுகளை நிறைவேற்றும் அதீத சக்தி படைத்தது. அந்த வகையில் நம் கனவுகள், ஆசைகள் அனைத்தும் நிறைவேற நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கடின முயற்சி செய்தாலும் ஒரு சில நேரங்களில் அதிர்ஷ்டம் இருந்தால் தான் நம்முடைய கனவுகள் நிறைவேறுகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்குரிய பலனை முழுமையாக அனுபவிக்க இறைவனுடைய அருள் நமக்கு தேவை. இறைவனுடைய அருளைப் பெற்று தரக்கூடிய இந்த அற்புத சக்தி வாய்ந்த பரிகாரத்தை நாமும் செய்வதன் மூலம் நம்முடைய கனவுகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.

எந்த ஒரு விஷயத்தையும், முழுமையான நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்குரிய பலன்களும், முழுமையாக கிடைக்கின்றன. நம்பிக்கை இல்லாமல் நீங்கள் செய்வதில் எந்த பலனும் இல்லை. உங்களுக்கு நன்மை தான் நடக்கும் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் நன்மை தான் நடக்கும். நம் ஆழ் மன எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையில் பல இடங்களில் உண்மையாக மாறுகின்றன.

ஒருவருக்கு எப்படியாவது நம் வாழ்க்கையில் ஒரு வீட்டை கட்டி விட வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அவருடைய ஆசையும், கனவும் நிறைவேற நாற்பத்தி எட்டு நாட்கள் அதாவது ஒரு மண்டலம் வரை தொடர்ந்து இறைவனிடம் ஒரு செங்கலை வைத்து, அதில் ஒரு வெள்ளை காகித துண்டு ஒன்றில் எப்படியாவது என்னுடைய கனவு இல்லத்தை நான் கட்டி விட வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து எழுதிக் கொண்டு விட்டார். இதனை அந்தச் செங்கல்லுடன் கட்டிவிட்டு வீட்டில் பூஜை அறையில் குபேர வடக்கு திசையில் வைத்து தினமும் பூஜை செய்யும் பொழுது அதற்கு தூப, தீப, ஆரத்தி காண்பித்து வந்தார். அவர் எண்ணியபடியே ஒரு மண்டலத்திற்குள் வீடு கட்டக்கூடிய யோகம் கிடைத்துவிட்டது. இப்படி தீர்க்கமாக நாம் நம்பி செய்யும் ஒரு செயல் நிச்சயம் நிறைவேறும் என்கிறது ஆன்மீகம்.

உங்கள் வீட்டில் திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கொம்பை கட்டி மாங்கல்யம் செய்து அதனுடன் உங்களுடைய வேண்டுதலையும் ஒரு வெள்ளை காகிதம் துண்டில் எழுதி கட்டிக் கொள்ளுங்கள். அதனை பூஜை அறையில் வைத்து இதே போல நாற்பத்தி எட்டு நாட்கள் மனதார பிரார்த்தித்து பூஜித்து வந்தால் உங்களுடைய கனவும் நிறைவேறும். இப்படி உங்கள் கனவுகள் எதைப் பற்றியதாக இருக்கிறதோ, அந்த ஒரு பொருளை வைத்து பூஜிப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

மேலும் ஆன்மீக தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4