வீட்டிற்கு வந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள்

Prathees
3 years ago
 வீட்டிற்கு வந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள்

இதுவரை வீட்டுக்கடன் பெறாத கிராமவாசிகளுக்கு நிலுவையில் உள்ள கடன் தவணையை செலுத்துமாறு வீட்டு வசதி அதிகார சபையினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகல் மாவட்டத்தில் பிங்கிரிய என்ற இடத்தில் பதிவாகியுள்ளது.

பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரபொகுன தலம்பொல கிராம மக்கள் குருநாகல் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து கடனுதவி தொடர்பான கடிதங்களை பெற்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டு பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும் என உரிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி கடனுதவிக்கு விண்ணப்பித்த போதிலும் இதுவரை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் கடன் பெறவில்லை என  கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!