ஆண்கள் இரவில் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தினால் மலட்டுத்தன்மை உண்டாகும்...

Nila
2 years ago
ஆண்கள் இரவில் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தினால் மலட்டுத்தன்மை உண்டாகும்...

வேலை, வாழ்க்கை முறை, உணவு, தூக்கம், பொழுபோக்கு என்று எல்லாமே மாறி வருகிறது. இரவில் தூங்கி பகலில் பணி செய்வது மாறி, ஒரு நாளின் பெரும்பகுதி விழித்துக்கொண்டே இருக்க எலக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கின்றன. இரவு நேர அலுவலகப் பணி ஒரு பக்கம் இருந்தாலும், பல நேரங்களில் தூக்கத்தை கட்டுப்படுத்தி, எலக்ட்ரானிக் சாதனங்கள் இரவை விழுங்குகிறது. இரவு நேரத்தில், பின்னரவைக் கடந்தும் தொடர்ந்து எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தினால், ஆண் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

நாள் முழுவதும் ஒரு நபர் ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் அல்லது லேப்டாப்பை வைத்துக்கொண்டிருப்பது அவருடைய உறவில் விரிசல் ஏற்படுத்துவதோடு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். முக்கியமாக, செல்போன்களில் இருந்து வெளிப்படும் ரேடியேஷன் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக கடந்த சில ஆண்டுகளாகக் கூறப்பட்டு வருகிறது. இந்தப் பெருந்தொற்று எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாட்டை அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஆண்களின் உடல் மற்றும் குறிப்பாக இனப்பெருக்க ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

குறிப்பாக, அதிக நேரம் செல்போன் பயன்பாடு விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்தைக் குறைக்கிறது.

ஆரோக்கியமான விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் கருவுறும் தன்மை, ஆகிய இரண்டுமே செல்போனின் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது. மாலை நேரத்துக்குப் பின்பும், படுக்கையிலும் ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லெட் பயன்படுத்துவது விந்தணுவின் இயக்கம், ஆரோக்கியம், தரம், கருமுட்டையை அடையும் வேகத்தின் தன்மை மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை பாதிக்கிறது. எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிப்படும் ஷார்ட்-வேவ்லெங்க்த் லைட் (SWL) இயங்காத அல்லது அசையாத விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜேபீ மருத்துவமனை மற்றும் ஸீவா ஃபெர்டிலிட்டி கிளினிக்கின் மூத்த IVF ஆலோசகரான, மருத்துவர் ஸ்வேதா கோஸ்வாமி, டிஜிட்டல் சாதனங்களில் வெளியாகும் விளக்குகளின் உமிழ்வு, தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, விந்தணு நீந்திச் சென்று கருமுட்டையை அடைவதிலும் தடையை ஏற்படுத்துகிறது. இதனால், ஆண் மலட்டுத்தன்மை அதிகரிக்கிறது என்று கூறுகிறார்.

வெவ்வேறு வண்ணங்களில் வெளிப்படும் டிஜிட்டல் சாதனங்கள், வெவ்வேறு அளவில் ஒட்டுமொத்த கருவுறும் தன்மையை பாதிக்கிறது என்று தெரிவித்தார். மாலை அல்லது இரவில் வெளியாகும் SWL, நீல நிறத்தில் இருக்கும். இது மெலடோனின் சுரப்பை குறைக்கிறது, இதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. மெலடோனின் குறைவு உடலில் பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. தூங்குவதற்கு சுரக்கும் ஹார்மொனே பாதிக்கப்படுவதால், உடலில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டு, ஆண் பெண் இருவருமே மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர்.


மதர்ஸ் லேப் IVF மையத்தின் மருத்துவ இயக்குநரும் IVF நிபுணருமான டாக்டர் ஷோபா குப்தா டிஜிட்டல் தொலைக்காட்சி உட்பட, அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் கணினிகள் மற்றும் வயர்லெஸ் இணைப்புகள் ஆகியவற்றின் வரம்பற்ற பயன்பாட்டைப் பற்றி, பகிர்ந்து கொண்டுள்ளார். "ரேடியேஷன் ஒரு நபரின் விந்தணுவை மட்டும் பாதிக்கவில்லை, அவருடைய DNA விலும் பாதிப்பை விளைவிக்கும் அபாயம் கொண்டது. இதனால் ஆரோக்கியமான செல்கள் தன்னைத் தானே ரிடீம் செய்யும் திறனை இழக்கின்றன. ரேடியேஷன் விந்தணு மற்றும் முட்டை செல்களை அடையும் போது, அவற்றை பலவீனமாக்கி, கருவுறும் தன்மையைக் குறைக்கிறது அல்லது கருக்கலைப்பை உண்டாக்குகிறது.

மாலை நேரத்தில், முன்னிரவில் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது தவறே இல்லை. ஆனால், இரவு நேரங்களில் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறார். உலக சுகாதார அமைப்பு கூறியது படி, உலகம் முழுவதும் 15% முதல் 20% வரையிலான மக்களுக்கு மலட்டுத்தன்மை காணப்படுகிறது. அதில், உலக அளவில் ஆண் மலட்டுத்தன்மை 20% முதல் 40% வரை மற்றும் இந்தியாவில் 23% வரை காணப்படுகிறது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷனும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் கதிர்வீச்சு ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும்.