இன்றைய வேத வசனம் 19.01.2022

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 19.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.  
மத்தேயு 26:41

ஒரு ஜெர்மானிய வங்கி ஊழியர் 62.40 யூரோக்கள் பணத்தை ஒரு வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யும்போது, திடீரென்று ஒரு குட்டித் தூக்கம் தூங்கிவிட்டார்.

எனவே அவரின் கைவிரல் தவறுதலாக “2” என்ற பட்டனை அழுத்திவிட, 222 மில்லியன் யூரோக்கள் (தோராயமாக 1959 கோடி ரூபாய்) அந்த வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.

அதனிமித்தம், அந்த பரிமாற்றத்தை சரிபார்க்கவேண்டிய அவருடைய சக வங்கி ஊழியரின் வேலையும் பறிபோனது. அந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டாலும், அவருடைய இந்த செயல் வங்கி ஊழியர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்தது.

சீஷர்கள் விழிப்பாய் இல்லையென்றால் அவர்கள் பெரிய தவரை செய்ய நேரிடும் என்று இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார்.

இயேசு கெத்செமனே என்னும் இடத்திற்கு அவர்களை அழைத்து வந்து ஜெபம்பண்ணும்போது, அவர் இந்த உலக வாழ்வில் அதுவரை அனுபவித்திராத அளவு துக்கமும் வியாகுலமும் அடைந்தார். அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் ஜெபிக்கவும், அவரோடே கூட விழித்திருக்கும்படியாகவும் கூறினார்

(மத்தேயு 26:38). ஆனால் அவர்கள் தூங்கிவிட்டார்கள் (வச. 40-41). அவர்கள் ஜெபிக்கவும் விழித்திருக்கவும் இயலாமல் அவரை மறுதலித்து தோற்றனர். கிறிஸ்துவிற்கு பெரிய தேவை ஏற்பட்டபோது சீஷர்கள் ஆவிக்குரிய விழிப்புணர்வில் குறைவுபட்டனர்.

நாம் இயேசுவின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தி, ஆவிக்குரிய விழிப்புணர்வோடும்  அர்ப்பணிப்புடனும் ஜெபத்தில் நேரம் செலவிடுவோம். அவ்வாறு செய்யும்போது எல்லா சோதனைகளையும் சகிக்கவும், கிறிஸ்துவை மறுதலிக்கும் பெரிய தவறை செய்யாமல் இருக்கும்படியாகவும் அவர் நம்மை பெலப்படுத்துவார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!