எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்த கடற்பகுதி.. கறுப்பு நிறத்தில் மாறிய கடற்கரை.!!!

Prasu
3 years ago
எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்த கடற்பகுதி.. கறுப்பு நிறத்தில் மாறிய கடற்கரை.!!!

பெரு நாட்டில் இருக்கும் கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் இரண்டு கிலோமீட்டர் பரப்பளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

பெரு நாட்டில் இருக்கும் பாஹியா பிளான்கா, கவேரா போன்ற தீவுகளில் இருக்கும் கடற்பகுதி, எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்திருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ரூபன் ரமிரெஷ் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதி வழக்கமாக தங்க நிறத்தில் ஜொலிக்கும்.

ஆனால், தற்போது கருமை நிறத்தில் இருக்கிறது. அதாவது லா பாம்பிலா என்ற சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணைய் கொண்டு சென்ற கப்பலிலிருந்து ஏற்பட்ட கசிவால், இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, கடற்கரையில் எண்ணெய் படலத்தை நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!