பிரித்தானியாவில் கல்லீரலில் கையொப்பமிட்ட வைத்தியர்; அதிர்ச்சியில் நோயாளி

வைத்தியர் ஒருவர் சத்திர சிகிச்சை செய்யும் போது நோயாளியின் கல்லீரலில் கையொப்பமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
பிரித்தானியாவில் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றிலே இவ்விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் கல்லீரல் சிகிச்கைப் பிரிவில் 12 ஆண்டுகளாக பணியாற்றிவந்த பிரம்ஹால் என்ற 57 வயதான மருத்துவரே இவ்வாறு நோயாளயின் கல்லீரலில் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு குறித்த வைத்தியர் நோயோளி ஒருவரின் கல்லீரலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், எனினும் நீண்ட நாட்களின் பின் அந்நோயாளி தனது கல்லீரலில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் ஒரு கையெழுத்து பொறிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், இதனை அடுத்து அந்த நோயாளி உடனடியாக இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் குறித்த வைத்தியர் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், Argon Beam machine எனப்படும் இயந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறு கல்லீரலில் கையொப்பம் இட்டதாகவும் தனது செயலுக்காக அந்நோயாளியிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ தீர்ப்பாயத்தில் இதுகுறித்து புகார் அளிக்கவே இவ் வழக்கை விசாரித்த நீதிபதி அவ்வைத்தியரின் மருத்துவ அங்கீகாரத்தை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



