குழந்தைகளை தாக்கும் ஓமிக்ரான் கொரோனா.. அறிகுறிகள் என்ன தெரியுமா?

Keerthi
3 years ago
குழந்தைகளை தாக்கும் ஓமிக்ரான் கொரோனா.. அறிகுறிகள் என்ன தெரியுமா?

குழந்தைகள் இடையே ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதாகவும், சிலருக்கு தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குளேரியா தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அறிகுறிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. தினசரி கேஸ்கள் இரண்டரை லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் 23 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்தியாவில் ஏற்படும் கேஸ்கள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்கள் என்று கூறப்படுகிறது.

ஓமிக்ரான் கேஸ்கள் மிகவும் மைல்டாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.குழந்தைகள் பொதுவாக எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்
 
இந்த நிலையில் குழந்தைகள் இடையே ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கடந்த அலைகளின் போது குழந்தைகளை பெரிய அளவில் கொரோனா பாதிக்கவில்லை. குழந்தைகள் பொதுவாக எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்பதால் அவர்களை பெரிதாக கொரோனா தாக்கவில்லை. அப்படியே தாக்கினாலும் பெரும்பாலான கேஸ்கள் லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே இல்லாத கொரோனா கேஸ்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் குழந்தைகள் இடையே தீவிரமான ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டு வருவதாக எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குளேரியா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு வேகமாக ஓமிக்ரான் பரவி வருகிறது. அதில் பலருக்கு தீவிர கேஸ்கள் ஏற்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கலாம். ஆனால் இவர்கள் இன்னும் வேக்சின் போட்டுக்கொள்ளவில்லை. ஓமிக்ரான் வேறு தீவிரமாக பரவுகிறது. இதனால் குழந்தைகளிடம் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரிக்கிறது.

வேக்சின் போடப்படாமல் போனது இதற்கு முதல் காரணம். கொரோனா காரணமாக டெல்லியில் கடந்த ஜனவரி 9-12 வரை 7 குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள். இது ஓமிக்ரான் கேஸ்களாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இவர்களுக்கு நாள்பட்ட சில உடல் குறைபாடுகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும் இப்படி கொரோனா காரணமாக குழந்தைகள் மரணம் அடைவது அதிகரித்துள்ளது. குழந்தைகள் பலர் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சிடிசி தெரிவித்துள்ளது.

ஆனால் தீவிர பாதிப்பு ஏற்பட்டாலும் சில குழந்தைகள் வேகமாக குணமடைகிறார்கள். இதய பாதிப்பு, சர்க்கரை வியாதி போன்ற பாதிப்புகள் இல்லாத காரணத்தால் குழந்தைகள் வேகமாக குணமடைகிறார்கள். இது ஒரு விதத்தில் நல்ல விஷயம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குளேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிகுறிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.அதன்படி காய்ச்சல், வறண்ட தொண்டை, மூக்கு அடைப்பு, இருமல் ஆகியவை குழந்தைகள் இடையே ஏற்படும் சாதாரண ஓமிக்ரான் அறிகுறிகள் ஆகும்.

சில குழந்தைகளுக்கு தீவிர அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மூச்சு விடுவதில் சிரமம், முகம், உதடு, கைகள் நீல நிறத்தில் மாறுவது. இதயம் லேசாக வலிப்பது, குழப்பம் ஏற்படுவது, திரவ பொருட்களை அருந்த முடியாமல் தவிப்பது, உறக்கம் இன்றி தவிப்பது ஆகியவை மோசமான அறிகுறிகளாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!