ஐந்து பேருடன் சென்ற கார் களனி ஆற்றில் கவிழ்ந்து விபத்து
யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற கார் ஒன்று யட்டியந்தோட்டை அலிவத்த பிரதேசத்தில் களனி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும்இ பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை அது நடக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது வீதியில் பயணித்த மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக வீதிக்கு அருகில் வாகனங்களை நிறுத்தியிருந்த நிலையில் பின்னால் வந்த லொறி ஒன்று வாகனங்கள் மீது மோதியுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்