கைக்குண்டு சந்தேகநபர் விளக்கமறியலில்

Prathees
4 years ago
கைக்குண்டு சந்தேகநபர் விளக்கமறியலில்

பொரளையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்திக பெரேரா என்ற சந்தேகநபர் இந்த வழக்கின் பிரதான சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேக நபரின் ஆவணங்களை சந்தேக நபர் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் சந்தேகநபரை பிணையில் விடுவிப்பது விசாரணைக்கு இடையூறாக அமையும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!