பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்பு

#Colombo #Arrest
Prathees
4 years ago
பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்பு

பொரளை – வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகிலுள்ள தேவாலய வளாகத்துக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (11) மாலை 4.40 மணியளவில் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தின் சிலைக்கு அருகாமையில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த தேவாலயத்தில் பணிபுரியும் ஒருவர் கண்டு  தகவல் தெரிவித்ததையடுத்து,  தேவாலயத்தின் பாதிரியார் பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனையடுத்து, ஸ்தலத்துக்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு  கைக்குண்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!