கொரோனா தொற்றை குறைக்க இதை இவர்கள் செய்தால் போதும். ஏன் இதுவரை செய்யவில்லை?

ஆம் முதலில் தற் கட்டுப்பாடு தேவை.
தடுப்பூசி மூன்று போட்டாச்சு எமக்கு தொற்று ஏற்படாது என அக்கறையீனத்தால் அலைபவர்களே முதல் தவறை செய்கிறார்கள். ஆம் ஒரு ஊசி போட்டாலே தொற்றாது என நினைத்து அலைந்தவர்கள் இரண்டு ஊசி போட்ட பின்னரும் இறந்த செய்தி உள்ளது.
அதை விட அவர்களுக்கு தொற்றாவிட்டாலும் அவர்களூடாக மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் என இவர்கள் நினைக்கவில்லை.
அதை தாண்டி நோய்எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பானங்களை வீட்டிலும் சரி வெளியிலும் சரி அருந்தலாம். தற்சூழலில் வைரஸ் தொற்றை அதிகரிக்கும் பானங்களை தவிர்ப்பது சிறந்தது. அதாவது இனிப்பு அதிகம் உள்ள பானங்களை தவிர்க்கலாம்.
கபசுர குடினீர் போன்ற பானங்களை பொது இடங்களிலும் கடைகள். உணவு விடுதிகளிலும் கட்டணம் அறவிடாமல் கொடுக்கலாம். வணக்க தலங்களில் அதிகமாக இதை கொடுப்பதால் மக்கள் தவிர்க்காமல் அருந்துவார்கள்.
இந்த வைரசால் ஏற்படப்போகும் நோயின் விழிப்புணர்வை அனைத்துப் பாடசாலைகளிலும். தினமும் ஓதவேண்டும். அப்படி செய்வதால் மாணவர்களிடமிருந்து பெற்றோருக்கு விரைவாக சென்றடையும்.
இது மாத்திரமல்ல இன்னும் மேலும் அதிக நடைமுறைகள் உங்களுக்கும் தெரியும் அவற்றை நீங்களும் இச்சமூகத்தில் ஒருவரென்பதால் கீழே உள்ள முகநூல் கொமண்டில் பதிவு செய்து. சமூகத்துக்கு உதவுங்கள். இப்படியான சமூக அக்கறையான தகவல்களை அறிய. Lanka4.com உடன் இணைந்திருங்கள்.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



