07.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
07.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி இன்றைக்கு வரும்.
பரணி: சமூகத்தில் உயர்மட்டத்தில் உள்ளோரின் நட்பு கிடைக்கும்.
கார்த்திகை 1: தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த விஷயத்தை செய்து முடிப்பீர்கள்

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
ரோகிணி: சில விஷயங்களை அலைந்து திரிந்து நல்லபடியாக முடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: புதிய வேலை பற்றி இன்று நல்லதொரு தீர்மானம் எடுப்பீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: முதலீடு லாபம் தரும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.
திருவாதிரை: உங்களின் துணிச்சலால் முன்பு இருந்த பிரச்னை ஒன்று தீரும்.
புனர்பூசம் 1,2,3: பழைய கடன் தொல்லை முடிந்து நிம்மதி வரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: புதிய விஷயங்களில் ஈடுபடும் முன் அதிக கவனம் தேவை.
பூசம்: பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ஆயில்யம்: நெருங்கிய நபர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

சிம்மம்: 
மகம்: மகிழ்ச்சி குறையாது. பணியிடத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.
பூரம்: காத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைக்கும். மனைவியால் நன்மை உண்டு.
உத்திரம் 1: குழந்தைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்லது.

கன்னி: 
உத்திரம் 2,3,4: இனிமையான நாள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.
அஸ்தம்: பணிகளில் கவனத்துடன் செயல்படுங்கள். நேரம் விரயமாகும்.
சித்திரை 1,2: குடும்ப ஒற்றுமை மேம்படும். தொழிலில் இருந்த போட்டி காணாமல் போகும்.

துலாம்: 
சித்திரை 3,4: உங்களது துறையில் வளர்ச்சி காண்பீர்கள். உழைப்பு கூடும்.
சுவாதி: எதிரிகள் மனம் மாறுவர். உறவினர்கள் உதவி செய்வர்.
விசாகம் 1,2,3: மற்றவர்கள் வியந்து பாராட்டும்படி வாழ்வில் உயர்வீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: கூடுதலாக உழைத்து குடும்பத்தினருக்கு ஆதரவு தருவீர்கள்.
அனுஷம்: நீங்கள் செய்த உதவிக்கு நன்றி தாமதமாகவே கிடைக்கும்.
கேட்டை: தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். புதிய துறையில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு: 
மூலம்: வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சிகளை அதிகப்படுத்துவீர்கள்.
பூராடம்: பணியாளர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மகிழ்ச்சி கூடும்.
உத்திராடம் 1: உங்கள் மனதிற்கு பிடித்தவரின் விருப்பம் ஒன்று நிறைவேறும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குழந்தைகளின் நலனில் நிறைவான முன்னேற்றம் வரும்.
திருவோணம்: பணியிடத்தில் யாருடைய வம்புக்கும் போக வேண்டாம்.
அவிட்டம் 1,2: நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபர் உங்களைத் தேடி வருவார்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: கவலை தீரும். வாழ்க்கைத்துணைக்கு நன்மை நிகழும்.
சதயம்: அலுவலகத்தில் யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.
பூரட்டாதி 1,2,3: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. மகிழ்ச்சியான நாள்.

மீனம்: 
பூரட்டாதி 4: சகிப்பு தன்மை அதிகரிக்கும். நினைத்த விஷயத்தை முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: உங்களின் செயலுக்கு பாராட்டு கிடைக்கும். கலகலப்பான நாள்.
ரேவதி: செலவு ஒன்று மகிழ்ச்சி தரும். புதிய பயணத்திட்டம் உருவாகும்.
 

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4