உலக சந்தை விலையேற்றம்: செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம்?

#SriLanka #prices #LANKA4 #Market #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
57 minutes ago
உலக சந்தை விலையேற்றம்: செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம்?

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள போதிலும், இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் விநியோக நிறுவனங்களுடன் கலந்துரையாடி, நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தத்தைப் போலவே, இந்த மாத இறுதியிலும் தற்போதைய நிலைமைகள் மற்றும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கருத்திற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4