இன்றைய வேத வசனம் 06.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதித்து உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் (ஆதியாகமம் 26:24).
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். (ஏசாயா 41:13,14).
"பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" (2 இராஜாக்கள் 6:16).
பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல.. நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; (2 நாளாகமம் 20:17).
பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; (உபாகமம் 31:6).
பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. புறஜாதிகளுக்குள், ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; (சகரியா 8:13)
ஆபிராமே, நீ பயப்படாதே; (ஆதியாகமம் 15:1)
தானியேலே, பயப்படாதே; (தானியேல் 10:12)
ஆகாரே, நீ பயப்படாதே; (ஆதியாகமம் 21:17)
ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.



