03.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
03.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: செயல்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். மகிழ்ச்சி கூடும்.
பரணி: முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று யோகமான நாள்.
கார்த்திகை 1: பணப்புழக்கம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் மேம்படும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பணி, தொழில் போன்றவை சுமுகமாக நடக்கும்.
ரோகிணி: யாரிடமும் தேவையற்ற மனஸ்தாபம், வீண் பகை வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: பழி ஏற்படுத்தும் செயல்களில் இருந்து விலகியிருங்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் நிம்மதி கூடும்.
திருவாதிரை: இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மன நிம்மதி அளிக்கும்.
புனர்பூசம் 1,2,3: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மனதில் பலம் கூடும்.

கடகம்: 
புனர்பூசம் 4: தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நட்பு வட்டம் விரியும்.
பூசம்: புதிய பொறுப்பு வரலாம். அதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள்.
ஆயில்யம்: சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். எதிலும் கவனமாக இருங்கள்.

சிம்மம்: 
மகம்: நல்ல வேலை கிடைக்கும். பக்தி சார்ந்த விஷயங்களை செய்வீர்கள்.
பூரம்: மனநிம்மதியும், வருமானமும் வரும். வங்கி கடன் கிடைப்பது தாமதமாகலாம்.
உத்திரம் 1: நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பேச்சினால் நன்மை வரும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
அஸ்தம்: திடீர் லாபம் வரும். கடன் அனுமதி கிடைக்கும். செலவு குறையும்.
சித்திரை 1,2: சகோதரருக்கு உதவி செய்வீர்கள். அவரிடம் நன்றியை எதிர்பார்க்காதீர்.

துலாம்: 
சித்திரை 3,4: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தைக்கு நன்மை வரும்.
சுவாதி: புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமாக இருங்கள்.
விசாகம் 1,2,3: வேலையில் இருந்து வந்த பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: யாரோடும் கருத்து வேற்றுமை வேண்டாம். அது சிக்கலைத் தரும்.
அனுஷம்: சரும நோய் குறையும். பிறரை குறை கூறும் குணத்தை மாற்றுங்கள்.
கேட்டை: சிலருடன் ஏற்பட்டிருந்த பகை மாறி அவர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு: 
மூலம்: அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் கையெழுத்தோ, வாக்குறுதியோ தர வேண்டாம்.
பூராடம்: முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். பேச்சில் கவர்ச்சி கூடும்.
உத்திராடம் 1: தன்னம்பிக்கை தேவை. முயற்சிகளில் பதற்றம் வேண்டாம்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குடும்ப உறவுகள் சுமுகமாகும். செலவு கட்டுப்படும்.
திருவோணம்: பணப் பிரச்னை, மனப் பிரச்னை இரண்டும் சரியாகும்.
அவிட்டம் 1,2: மற்றவர்களோடு விரோத மனப்பான்மை இல்லாமல் இருங்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பிறரது செயலில் தலையிட வேண்டாம். குழந்தைகளால் நிம்மதி உண்டு.
சதயம்: புதிய முதலீடுகள் இப்போது செய்ய வேண்டாம். நஷ்டங்கள் குறையும்.
பூரட்டாதி 1,2,3: தந்தைக்கு நன்மை வரும். அலைச்சலைக் குறையுங்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: நண்பர்களால் ஆதாயம் உண்டு. சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தாயாருக்கு நன்மை வரும்.
ரேவதி: நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பாராட்டு பெறுவீர்கள்.
 

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4