இன்றைய வேத வசனம் 28.12.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 28.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

புகழ்பெற்ற பெண்களும் உண்டு; அதே நேரத்தில் ஒரு சில வசனங்களில் மட்டுமே பேசப்பட்டு, உள்ளத்தின் ஆழத்தில் நல்ல படிப்பினைகளை ஏற்படுத்தி விட்டு சென்ற சகோதரிகளும் உண்டு.

தொற்காள் ஒரு பெரிய தீர்க்கதரிசியோ, அல்லது இளவரசியோ அல்ல. அவள் அங்கிகளையும், வஸ்திரங்களையும் செய்து, அதனால் வந்த ஊதியத்தின் மூலம், கர்த்தருக்கு ஊழியஞ்செய்து கொண்டு வந்தாள்.

எந்த நிலையில் இருந்தாலும் கர்த்தருக்கு ஊழியஞ் செய்ய முடியும் என்று அவளது வாழ்க்கை அழகாய் பேசுகிறதல்லவா? (அப் 9:36-41)

உன் கையிலிருக்கிறது என்ன? என்று கர்த்தர் கேட்டார். மோசே தன் கோலைக் காண்பித்தான். தாவீதிடம் கவணும் கற்களும் இருந்தன. சிம்சோனிடம் கழுதை தாடை எலும்பு இருந்தது. ஆனால் தொற்காளிடம் இருந்தது வெறும் ஊசிதான்.

அதுபோதும்! ஊசியினாலும் தையலினாலும் வந்த வருமானத்தால், நற்கிரியைகளையும், தருமங்களையும் தொற்காள் மிகுதியாய் செய்து கொண்டு வந்தாள். கர்த்தர் அதைக் கண்டார். அவளைக் கௌரவித்தார். அவள் மரித்தபோது, பேதுருவின் மூலம் உயிரோடு எழுப்பி, அவளை மகிமையான சாட்சியாக்கினார்.

கிறிஸ்துவுக்குள் சீஷர்கள் என்று அநேகம் பேர் இருந்தாலும், "சீஷி" என்று அழைக்கப்பட்டவள் இவள் ஒருத்தியே! அவள் மூலமாய், அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். (அப் 9:42).
தேவ ஜனமே! உங்கள் வெளிச்சம் சிறியதாய் இருந்தாலும் பரவாயில்லை; நீங்கள் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்யும்போது, அவர் உங்களை வல்லமையாக பிரகாசிக்கச் செய்வார்.

மத்தேயு 5:16
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

ஆமென்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!