18 சித்தர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கை, சமாதி... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 01)

யார் இந்த 18 சித்தர்கள்? அவர்களின் தோற்றமும் மறைவும்.
18 சித்தர்கள் பல்வேறு மூலிகை மருந்துகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி, யோகா, போன்ற கலைகளில் ஞானமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர்.
மனித குலம் தழைக்க பல வித மூலிகை குறிப்புகளை பிறருக்கு உபதேசித்து ஓலைகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். கடவுள் பக்தியுடையவர்களாக சதுரகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.
நீண்ட நாட்கள் வாழவைக்கும் இளமை மூலிகைகளை கண்டறிந்து அவற்றை சாப்பிட்டு நீண்ட ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். மறைந்து ஜீவ சமாதிகளில் வீற்றிருந்தாலும் இன்னும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு சூட்சும ரூபமாக உதவி வருகின்றனர், பல சித்தர்கள். ஞானிகள் சித்தர்கள் எண்ணற்றோர் இருந்தாலும் 18 சித்தர்களே குறிப்பிடத்தக்கவர்கள்.
சித்தர்களின் பிறப்பும் மறைவும்
பதஞ்சலி முனிவர்
- பிறந்தது பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில்.
- 5 யுகம், 7 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- இவர் சமாதியடைந்த இடம் ராமேஸ்வரம்.
- இவர் ஆதி சேஷனின் அம்சமாக அவதரித்தார்.
- வியாக்ர பாத்ருடன் தில்லையில் இருந்து சிவ தாண்டவம் கண்டார்.
- பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலை இயற்றினார்.
அகத்திய முனிவர்
- பிறந்தது மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்.
- 4 யுகம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- சமாதியடைந்த இடம் திருவனந்தபுரம்.
- 18 சித்தர்களில் முதன்மையானவர்.
- சித்தர்களின் தலைவர்.
- தமிழுக்கு பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றவர்.
- தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர்.
- போகர், மச்சமுனி இவரின் சீடர்களாவர்.
- திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.
போகர்
- பிறந்தது வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில்.
- 300 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- ஆவினன்குடியில் சமாதியடைந்தார்.
- இவர் அகத்திய முனிவரின் சீடர் ஆவார்.
- சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார்.
- போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார்.
- நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.
கமலமுனி
- பிறந்தது வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில்.
- 4000 வருடம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- சமாதியடைந்த இடம் திருவாரூர்.
- இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார்.
- “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.
திருமூலர்
- பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில்.
- 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- சிதம்பரத்தில் சமாதியடைந்தார்.
- 63 நாயன்மார்களில் ஒருவர்.
- மூலன் என்ற இடையனின் உடலில் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதமாக 3000 பாடல்களை கொண்டு திருமந்திரம் என்ற நூலை வழங்கினார்.
- சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி அடைந்தார்.
குதம்பை சித்தர்
- பிறந்தது ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில்.
- 1800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- மாயவரத்தில் சமாதியடைந்தார்.
- இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைத்து பாடல்கள் பாடியுள்ளார்.
- இவரது பாடல்களில் இவர் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு மிக்கவை.
கோரக்கர்
- பிறந்தது கார்த்திகை மாத ஆயில்யம் நட்சத்திரத்தில்.
- 880 வருடம் 11 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- பேரூரில் சமாதியடைந்தார்.
- மச்சமுனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர்.
- அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார்.போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்.
தன்வந்திரி
- பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில்.
- 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- வைத்தீஸ்வரன்கோவிலில் சமாதியடைந்தார்.
- இவர் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார்.
- இவர் ஆயுர்வேத மருத்துவ முறையை மக்களுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்தார்.
சுந்தரானந்தர்
- பிறந்தது ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்.
- 800 வருடம் 28 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- மதுரையில் சமாதியடைந்தார்.
- இவர் சட்டைமுனியின் சீடர்.
- அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர்.
- ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார்.
கொங்கணர்
- பிறந்தது சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில்.
- 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- திருப்பதியில் சமாதியடைந்தார்.
- இவர் போகரின் சீடர்.
- அத்தோடு, இவர் பல மகான்களை சந்தித்து ஞானம் அடைந்தார். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்ட என பல நூல்களை இயற்றியுள்ளார்.
சட்டமுனி
- பிறந்தது ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில்.
- 800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- திருவரங்கத்தில் சமாதியடைந்தார்.
- சட்டைமுனி ஈழ நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார்.
- வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார்.
வான்மீகர்
- பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில்.
- 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- எட்டுக்குடியில் சமாதியடைந்தார்.
- இவர் நாரத முனிவரின் சீடர்.
- இராமாயண இதிகாசத்தை அளித்தவர். எட்டிக்குடு எனும் ஊரில் சமாதி அடைந்தார்.
ராமதேவர்
- பிறந்தது மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில்.
- 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- அழகர்மலையில் சமாதியடைந்தார்.
- இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கலானார்.
- அங்கு இவர், யாக்கோபு என அழைக்கப்பட்டார்.
- தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார்.
- அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது.
- ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார்.
- போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாதரை வணங்கி, தாம் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார்.
நந்தீசுவரர்
- பிறந்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில்.
- 700 வருடம் 03 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- காசியில் சமாதியடைந்தார்.
- பெங்களூருவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நந்தி மலை.
- இந்த மலையின் உச்சியில் இருந்து தென் பெண்ணை, பாலாறு, அர்க்காவதி ஆறுகள் உற்பத்தியாகின்றன.
- நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
சோழர் காலத்தில் இந்த மலை ‘ஆனந்த கிரி’ என அழைக்கப்பட்டது.
- யோக நந்தீசுவரர் இந்த மலையில் தவம் செய்ததாகவும், இதனால் ‘நந்தி மலை’ என இது பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
- இந்த மலையின் உச்சியில் சோழர்கள் கட்டிய யோக நந்தீசுவர சுவாமி கோவில் உள்ளது.
- இந்த மலை, துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் காட்சி தருவதால், இந்த மலைக்கு நந்திமலை என பெயர் வந்ததா கவும் சொல்லப்படுகிறது.
- சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நந்திமலை அமைந்து இருக்கிறது.
இடைக்காடர்
- பிறந்தது புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்.
- 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
- இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர்.
- இவரது பாடல்கள் உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையனதாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன.
- இவர் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார்.
மச்சமுனி
- பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில்.
- 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்தார்.
- சித்தர்கள் யுகங்கள் பல கடந்து தம்முடைய தேகத்தை கல்பதேகமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவார்கள்.
- திரேதாயுகத்தில் அப்படி அபூர்வமாக வாழ்ந்த சித்தர்களில் மச்சரிஷியும் ஒருவர்.
- மச்சமுனி, மச்சேந்திரர், மச்சேந்திரநாதர் என்ற பெயர்களெல்லாம் கொண்ட சித்தர் ஒருவரே.
- ஓர் இடத்தை விட்டு வேறு ஓர் இடத்துக்குச் செல்லும் போதும், ஒரு காலட்டத்தைக் கடந்து வாழும் போதும் பெயர்கள் தான் வேறுபடுகின்றன.
- தலையில் சடைமுடியுடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, கையில் ஒரு பிரம்புத்தடியுடன் ஒரு சாமியார் இருந்தால், அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள், அவரை சடைசாமி என்று அழைப்பார்கள்.
- ஒரு சிலர் அவரை விபூதி சாமி என்ற சொல்வார்கள். சிலர், பிரம்ரபு சாமி என்பார்கள்.
- இதேபோல ஊர்ப் பெயரை வைத்து பூண்டிமகான், திருவலச்சித்தர் என்ற பெயர்களும் உண்டு.
- சித்தர்களுக்கு, உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன் என்பது கொள்கையாகும்.
- சித்தர்களுடைய பெயர்கள் எல்லாம் அவர்களாக வைத்துக் கொள்வதில்லை.
- அவர்களுக்கு எந்தப் பெயரை வைத்தாலும் அதில் அக்கறை காட்டுவதுமில்லை.
- தூல உடம்புக்கு எந்தப் பெயர் வைத்தால் என்ன என்று இருப்பார்கள்.
- மச்சமுனி, அகத்தியர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- ஒரு சமயம், கடற்கரை யோரத்தில், சிவபெருமான், உமையம்மைக்கு தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார்.
- உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அம்மைக்கு உறக்கம் வந்துவிட்டது.
- அக்கடலில் வசித்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்த கருவானது, இம்மந்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டது.
- பின் வெளியே வந்த அந்த மீன் வயிற்றுப் பிள்ளைக்கு சிவபெருமான், மச்சர் என்ற பெயரைக் கொடுத்தார்.
- மச்சரின் உருவத்திலிருந்து தலை மனித வடிவமும், உடல் மீனின் வடிவமும் கொண்டது என்ற குறிப்பு, நமக்குக் கிடைக்கிறது.
- முழவதும் மனித வடிவம் கொண்டதே மச்சரின் உருவம் என்ற கருத்தும் நிலவுகிறது.
கருவூரார்
- பிறந்தது சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில்.
- 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- கரூரில் சமாதியடைந்தார்.
- இவர் போகரின் சீடர்.
- தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
- கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர்.
- பாம்பாட்டி சித்தர்
- பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில்.
- 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
- சங்கரன்கோவிலில் சமாதியடைந்துள்ளார்.
- “ஆடு பாம்பே” என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார்.
- பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.



