வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

Prabha Praneetha
3 years ago
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் பற்றி அறியாததால் வைத்தியசாலைக்கும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளிலும் மருத்துவ சிகிச்சையை நாடினர்.

வேலை நிறுத்தம் காரணமாக சிகிச்சை பெறாமல் வீடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தமை குறிப்பிடதக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!