கிளிநொச்சிப்பகுதியில் உண்டான மோதலில் நபரொருவர் பலி!

#SriLanka #Kilinochchi #Murder
கிளிநொச்சிப்பகுதியில் உண்டான மோதலில் நபரொருவர் பலி!

கிளிநொச்சி பகுதியில் உண்டான தனிப்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்குள்ளாகி கொலையுண்டார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் ஷாந்தபுறம் பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு தீவிரமடைந்து ஏற்பட்ட மோதலின் போதே இக்கொலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 51 வயதுடைய கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 15 மற்றும் 28 வயதுகளையுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!