இன்றைய வேத வசனம் 15.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
1874 - ம் ஆண்டு மிகச் சிறந்த மிஷனெரியும், ஆப்பிரிக்கா காடுகளில் சென்று, கர்த்தருக்காக வல்லமையாக ஊழியஞ்செய்தவருமான, டேவிட் லிவிங்ஸ்ட னின் அடக்க ஆராதனைக்காக திரள் கூட்டம் லண்டன் மாநகரிலுள்ள ஆலயத்தில் கூடியிருந்தனர்.
அவர் சரீரம் ஒரு வீரனுடைய சரீரம் போல் கெம்பீரமாயிருந்தது. கூடியிருந்த மக்களெல்லாம் லிவிங்ஸ்ட னின் பக்தி, தியாகம், ஜெபஜீவியம், பிரசங்கம் போன்றவற்றை, வாயார புகழ்ந்து கொண்டிருந்தனர்.
அங்கு ஒருவன் மிகவும் தேம்பித் தேம்பி அழுதான். அவனிடமிருந்து சாராய நாற்றம் குப்பென்று வீசியது. அவன் அழுத அழுகைக்கு அளவே இல்லலை.
ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது அவன் சொன்னான், "நானும் டேவிட் லிவிங்ஸ்ட னும் ஒரே வருடத்தில்தான் பிறந்தோம், ஒன்றாகவே படித்தோம், ஒன்றாகவே வளர்ந்தோம், அவன் கிறிஸ்துவின் பணிக்காக சென்ற போது அவனை நான் பைத்தியக்காரன் என்று கேலி செய்தேன்.
உலகத்தை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பி குடி, சூதாட்டம், வேசித்தனத்தில் இறங்கினேன். இப்பொழுதோ எனக்கு வியாதி, வறுமை, எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாடுகிறேன்.
என்னை மனிதரும் மதிக்க மாட்டார்கள். பரலோகமும் என்னை ஏற்றுக் கொள்ளாது. நான் என்ன செய்வது? என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதான்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
நீதிமொழிகள் 21:23
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.



