அவுஸ்திரேலியா - தென் கொரியா பல டொலர் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து.

#world news #Australia
Mugunthan Mugunthan
1 year ago
அவுஸ்திரேலியா - தென் கொரியா பல டொலர் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் 717 மில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தென் கொரிய ஜனாதிபதியின் 3 நாள் கன்பேராவிற்கான விஜயத்தின் போது சுமார் 1 பில்லியன் டொலர் பெறுமதியான இவ்வொப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.

கொவிட் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் தென் கொரிய ஜனாதிபதி ஆவார்.

புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் தென் கொரிய பாதுகாப்பு நிறுவனமான 'Hanwha' அவுஸ்திரேலியா இராணுவத்திற்கு பீரங்கி ஆயுதங்கள், விநியோக வாகனங்கள் மற்றும் ரேடார்களை வழங்கும்.

இது அவுஸ்திரேலியாவுக்கும் ஆசிய நாட்டிற்கும் இடையே செய்யப்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.

மேலும் இது அவுஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அணுசக்தியால் இயங்கக்கூடிய நீர் மூழ்கிக்கப்பல்களை அவுஸ்திரேலியாவானது அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியதுடன் இணைந்து உருவாக்க ஒப்பந்தம் ஒன்று நடைமுறைப்படுத்தியது. இது AUKUS என அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு