ஒரு ஆண்டில் சிறுமிக்கு நான்கு முறை திருமணம் செய்து வைத்த தாய்
#Marraige
#Arrest
Prasu
3 years ago

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா நகரில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். 18 வயது நிரம்பாத அவருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரது தாயார் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் அங்கு வாழ விருப்பமின்றி சிறுமி வீடு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து அதுபோல இந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை சிறுமியை வேறுவேறு நபர்களுக்கு திருமணம் செய்து வைத்தும் சிறுமி வாழாமல் திரும்பி வந்ததால் நான்கவாதாக ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க தாயார் முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுமியின் தாய் மற்றும் சகோதரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.



