இந்திய பெருங்கடலில் நடைபெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி
Prabha Praneetha
3 years ago

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர்.
மூன்று நாடுகளைச் சேர்ந்த அதிநவீன கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் கப்பலில் இருந்து இயக்கப்படும் போர் விமானங்களும் போர் ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டன.
இதேவேளை இந்த நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், 3 நாடுகளின் கடலோர காவல்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குதல் போன்றவையே இந்த பயிற்சியின் நோக்கம் என மாலைதீவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகிய இந்த போர் ஒத்திகை பயிற்சி, நேற்று மாலைதீவில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.



