உலகிலேயே மிகவும் வயதான மூதாட்டி காலமானார்..!!

Keerthi
4 years ago
உலகிலேயே மிகவும் வயதான மூதாட்டி காலமானார்..!!

உலகிலேயே மிகவும் வயதான நபர் என்று அடையாளம் காணப்பட்ட ஃபிரான்சிஸ்கோ சுஸானோ 124 வயதில் காலமானார்.

அவருக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ சுஸானோ. லோலோ என்று குடும்பத்தினர் இவரை அழைத்து வந்தனர். 1897-ம் ஆண்டு இவர் பிறந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் நெக்ரோஸ் ஓசிடெண்டல் என்கிற மாகாணத்தில் வாழ்ந்து வந்த இவர், காபன்கலன் என்கிற இடத்தில் மரணமடைந்தார். குடும்பத்தினர் இவரை பத்திரமாக பார்த்துக் கொண்டனர். எனினும் அவர் மறைந்தது அனைவரையும் கவலையடைச் செய்துள்ளது.

முன்னதாக 122 வயது வரை வாழ்ந்து மறைந்து போன ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெனின் கால்மெண்ட் உலகின் மிகவும் வயதான மூதாட்டியாக இருந்தார். தற்போது அந்த சாதனையை ஃபிரான்சிஸ்கோ சுஸானோ முறியடித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!