நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் தொற்று உறுதி
Reha
3 years ago

நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கமலஹாசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.



