முடிவிலி சின்னத்தின் ரகசியம் என்ன?

#history
Prathees
2 years ago
முடிவிலி சின்னத்தின் ரகசியம் என்ன?

சமீபத்தில் முகப்புத்தம் அதன் மெட்டா என்ற புதிய முடிவிலி போன்ற லோகோவையும் அறிமுகப்படுத்தியது.

அறிவியல் மற்றும் அமானுஷ்யம் இவை இரண்டிலும் மிகவும் பிரபலமான மற்றும் பரவலான சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது.

வழக்கமான அறிவியலின் படி, முடிவிலி சின்னம் என்பது அனைத்து அறிவியலிலும், இயற்பியலிலும், HTML குறியீட்டிலும் கூட பயன்படுத்தப்படும் ஒரு கணித சின்னமாகும். 

ஆனால் உண்மையில் இது எங்கிருந்து வந்தது என்றால் அதற்கு நாம் எகிப்து நோக்கி தான் பயணப்பட வேண்டும்.

முடிவிலியின் அடையாளமானது வாட்ஜெட் தேவியின் சின்னங்களான யுரேயஸிலிருந்து வந்தது...

அதாவது அது ஒரு தெய்வீக பாம்பு.

இப்போது புரிந்திருக்குமே யாம் எதற்காக இந்த பதிவை பதிவேற்றுகிறோம் என்று.

பார்வோன்களின் முடிசூட்டு காலத்தில், இந்த தெய்வீக பாம்பினால் முடிசூட்டப்படும் வரை அவர்கள் இராஜாவாகவே அல்லது இராணியாகவோ அங்கிகரிக்கப்பட மாட்டார்கள்.

அதே அங்கிகாரம் தான் இன்று முகப்புத்தகத்திற்கு கிடைத்திருக்கிறது.

இந்த நாகர்கள் அன்றிலிருந்து இன்று வரை ஒரே முறையை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு அதையே வரலாற்றெங்கிலும் செய்து வருகிறார்கள்.