வரவு செலவுத் திட்டத்தில் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது:திலும் அமுனுகம

Prabha Praneetha
2 years ago
வரவு செலவுத் திட்டத்தில் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது:திலும் அமுனுகம

ஏனைய வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் பரிசுகள் அதாவது சம்பள அதிகரிப்பு அல்லது வேறு சிறப்பு சலுகைகளை எதனையும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் வழங்க முடியாது போகலாம் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன என்பது குறித்து அண்மையில் நிதியமைச்சரிடம் எழுப்பப்பட்ட கே்ளவிக்கு அவர் வழங்கிய இருந்த பதில் தொடர்பில் கண்டியில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து வெளியிடும் போதே அமுனுகம இதனை கூறியுள்ளார்.

வழமையாக வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது பரிசுகளை எதிர்பார்ப்பார்கள். சம்பள அதிகரிப்பு உட்பட பல சலுகைகளை எதிர்பார்ப்பார்கள். வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அவற்றை செய்ய முடியாது என்றே நிதியமைச்சர் கூறியுள்ளார்.

எனினும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி, கிராமிய மட்டத்திலான வாழ்வாதார திட்டங்களுக்காக பெருந்தொகை நிதி ஒதுக்கப்படும். ஆனால், கடந்த வரவு செலவுத்திட்டங்களில் எதிர்பார்த்த பரிசுகள் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்க முடியாது என்றே நிதியமைச்சர் கூறியுள்ளார் எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.