கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
#Death
Prasu
4 years ago
இரத்தினபுரி, அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்புர பிரதேசத்தில் கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணொருவரின் சடலத்தை அயகம பொலிஸார் மீட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, பிம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காகக இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அயகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.