லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் உயிரிழப்பு
#Accident
#Death
Prasu
3 years ago

எல்பிட்டிய, மாபலகம வீதியின் காந்தகஹ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



