65 வயது நபரை கரம் பிடித்த 18 வயது பெண்

Prasu
3 years ago
65 வயது நபரை கரம் பிடித்த 18 வயது பெண்

18 வயது இளம்பெண்ணை அவரது ஞானத்தந்தை திருமணம் செய்து கொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் ப்ளோரிடாவில் மைக் ஹவுகாபுக்(61) என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் 18 வயதுள்ள தேஜா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவர்களின் வயது வித்தியாசம் மட்டும் காரணம் இல்லை. இதில் முக்கியமாக மைக் ஹவுகாபுக், தேஜாவின் ஞானதந்தை ஆவார். இந்நிலையில் பேஸ்புக்கிலிருந்து தானும், என் மனைவியும் விலகுவதாக மைக் ஹவுகாபுக் அறிவித்துள்ளார்.

ஏனென்றால் தொடர்ந்து தங்களை பற்றி பலர் அவதூறாக விமர்சிப்பதாக மைக் ஹவுகாபுக் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பெண்கள் பலர் என் மனைவியை பார்த்து பொறாமைபடுவதால் நாங்கள் பேஸ்புக்கிலிருந்து விலகுவதாக மைக் ஹவுகாபுக் கூறியுள்ளார். அதே வேளையில் என்னை இன்ஸ்டாகிராமில் பின் தொடரலாம் எனவும் மைக் ஹவுகாபுக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேஜா கூறியபோது "நான் யாரை பற்றியும் கவலைப்படவில்லை. இது என்னுடைய வாழ்க்கை நாங்கள் முழுமையாக வாழ்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!