உலகிலேயே சக்திவாய்ந்த கடவுச்சீட்டு
Prasu
4 years ago
ஐரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மன் நாட்டின் கடவுச்சீட்டு தான் சக்தி வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளின் சக்திவாய்ந்த கடவுசீட்டுகளின் பட்டியலில் ஜெர்மன் கடவுசீட்டு, மூன்றாம் இடம் பெற்றிருக்கிறது. அதாவது, ஜெர்மன், இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை தான் பெற்றிருக்கிறது. ஆனால், இரண்டு நாடுகள் முதல் இடத்தில் இருப்பதால் ஜெர்மன் மூன்றாம் இடம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, உலகிலேயே சக்திவாய்ந்த கடவுசீட்டு என்றால் அந்த கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு, விசாயின்றி முன்பே பயணிக்க முடியும் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஜெர்மன் கடவுச்சீட்டுடன் 190 நாடுகளுக்கு விசாயின்றி முன்கூட்டியே பயணிக்க முடியும்.