பிரான்ஸில் PCR பரிசோதனனைகளுக்கு கட்டணம்! - எவ்வளவு..?

#world_news #France
பிரான்ஸில் PCR பரிசோதனனைகளுக்கு கட்டணம்! - எவ்வளவு..?

பிரான்சில் கொரோனா பரிசோதனைகள் ‘இனிமேல்’ இலவசம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் குறிப்பிட்ட சிலரை தவிர மீதம் அனைவருக்கும் கட்டணம் அறவிடப்படும்.

மருத்துவ சான்றிதழ், மருத்துவரின் பரிந்துரை கடிதங்கள் உடையவர்கள் மற்றும் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் தொடரந்தும் இலவசமாகும். ‘பயணங்கள் மேற்கொள்பவர்கள், தடுப்பூசி போடாமல் சில இடங்களுக்கு பயணிக்க தேவையுடையவர்கள் மேற்கொள்ளும் பரிசோதனைகள் போன்றவற்றுக்கு PCR கட்டணம் செலுத்தவேண்டும்.

கட்டணம் எவ்வளவு..?

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு PCR பரிசோதனைகளுக்கு 44 யூரோக்களும், ஆண்டிஜென் பரிசோதனைகளுக்கு 22 யூரோக்களும் கட்டணமாக அறவிடப்படும். இந்த இரு கட்டணங்களும் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்கு மட்டுமே.

அதேவேளை, மருத்துவ நிலையங்களில் 25 இல் இருந்து 30 யூரோக்களில் PCR முடிவுகளும், சுட பரிசோதனைகளுக்கு 5.20 யூரோக்களும் கட்டணமாக அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!