தன் குழந்தையை குத்திக் கொன்ற பட்டதாரி ஆசிரியர்
அண்மையில் அனுராதபுரம் ஸ்ரீவத்திபுர பிரதேசத்தில் 29 வயது தாய் ஒருவர் தனது குழந்தையை கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
சந்தேக நபரான குறித்த தாய் குழந்தையின் கழுத்தில் குத்தி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாய் ஒரு பட்டதாரி ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையை கொலை செய்த பிறகு அவர், கல்னேவ பொலிசில் சென்று தனது மகளைக் கொலை செய்து விட்டதாகக் கூறி சரணடைந்துள்ளார். அதன் பின்னர் 5 ம் திகதி இரவு, அனுராதபுரம் தலைமையக பொலிஸார் அங்கு சென்று அவரை கைது செய்தது.
குறித்த பட்டதாரி ஆசிரியரான சந்தேக நபர் பிரசவத்திற்குப் பிறகு கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் என்று பொலிசார் தெரிவித்தனர்.
அவரது கணவர் போதைக்கு அடிமையானவர் எனவும் தனக்கு வீட்டில் எந்த ஆதரவும் கொடுக்காததால் குழந்தையை கொன்றதாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தனது மருமகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக உயிரிழந்த குழந்தையின் தாத்தா தெரிவித்துள்ளார்.