இலங்கையில் புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம்!
#SriLanka
#exam
Yuga
4 years ago
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாமெனக் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இன்று(07) பாராளுமன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பில் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் புதிய பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.