போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆப்பு
#SriLanka
Prathees
3 years ago

போதைக்கு அடிமையானவர்களுக்கு உரிய மருத்துவ சான்றிதழை வழங்காமல் இருக்க தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் வைசசீந்திர கமகே நேற்று தெரிவித்தார்.
போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்ப்படவுள்ளது.
இத்திட்டம் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை நீடித்தல் மற்றும் புதிய அனுமதிப்பத்திரங்களைப் பெறுதல் போன்றவற்றிற்கு இந்த செயல்முறை செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் போதை மருந்து உட்கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயகரமான விபத்துகளை கருத்தில் கொண்டு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.



