உலக அளவில் கொரோனா பாதிப்பு சரிவு- உலக சுகாதார அமைப்பு தகவல்
Keerthi
3 years ago

ஒரு வார கால உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் பற்றிய அறிக்கையை உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.
இதில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் புதிய கொரோனா பாதிப்பு சரிவை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது.
உலக அளவில் 31 லட்சம் பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 54 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். பாதிப்பு 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இறப்பில் பெரிதான மாற்றம் இல்லை. ஆப்பிரிக்காவில் தொற்று பாதிப்பு 43 சதவீதமும், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 20 சதவீதமும், வட-தென் அமெரிக்காவிலும், மேற்கு பசிபிக் பிராந்தியத்திலும் 12 சதவீதமும் சரிவை சந்தித்து இருக்கிறது.
செப்டம்பர் இறுதி வரையில் மூன்றில் ஒரு பங்கு ஆப்பிரிக்க நாடுகள், தங்கள் மக்களில் 19 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளன.



