வெளிநாட்டவர்கள் சுவிற்சலாந்தில் வீடு அல்லது சொத்தை வாங்கலாமா?

#world_news #Switzerland
வெளிநாட்டவர்கள் சுவிற்சலாந்தில் வீடு அல்லது சொத்தை வாங்கலாமா?

தற்போதைய கொவிட் சூழ்நிலையில் பெரும்பாலான புத்திஜீவிகள் வீடு மற்றும் சொத்துக்களின் பெறுமதி இறங்கும் என எதிர்பார்த்த வேளை அதற்கு எதிராகவே நடந்தது. வாடகை, மற்றும் கொள்வனவு விலைகள் சொத்துக்கள் மற்றம் வீடுகளின் குடிமனைகளின் உயர்வடைந்தது.
ஆகவே வாங்க கூடியவர்கள் யாராயினும் வாங்கலாம். ஆனால் எப்படி என்பது தான் இனி நாம் பார்ப்பது.

வெளிநாட்டவர்கள் சுவிற்சலாந்தில் ஒரு வீட்டை வாங்கலாமா?

இந்த கேள்விக்கு பதில் ஆம் என்பது தான். ஆனால் உங்கள் சட்ட நிலைமையை பொறுத்தது. வெளிநாட்டவர் சுவிஸிற்கு வெளியே வாழ்பவர்களாயின் லெக்ஸ் கொல்லர் விதிகளுக்கமைய வீடுகளை வாங்கலாம்.

சுவிற்சலாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் வீடு வாங்கலாமா?

  • முதலாவதாக உங்கள் குடியுரிமையை பரிசீலிக்க வேண்டும். நீங்கள் சுவிஸில் வாழும் ஒரு EU/EFTA பிரஜை அல்லது சி அனுமதி இருப்பின் உங்களால் வாங்க முடியும்.
  • இருப்பினும் உங்களுக்கும் சாதாரண குடிமகனுக்கு இருப்பதைப் போல உரிமைகள் இருக்கும். உங்களுக்கு மேலதிக அனுமதிகள் ஒரு சாதாரண குடிமகனுக்கு இல்லாதததைப்போல் கிடையாது.

3ம் நிலை வெளிநாட்டு பிரஜைகளுக்கு எவ்வாறு?

  • ஆம். நீங்கள் ஒரு EU/EFTA  பிரஜை இல்லை அத்துடன் சுவிஸில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவரல்லாதவர் 3ம் நிலை வெளிநாட்டு பிரஜை ஆவார்.
  • உங்களிடம் சட்டபுர்வ பி குடியுரிமை இருப்பின் உங்களுக்கும் சொத்துக்களை சுவிற்சலாந்தில் வாங்க முடியும். அதேவேளை நீங்கள் வாங்கும் அந்த சொத்துடைமையில் வாழ்பவராக இருத்தல் அவசியம்.
  • நீங்கள் இந்த வீட்டில் எவ்வளவு காலமும் சுவிற்சலாந்தில் வாழும் வரை அல்லது வாங்கிய காணியில் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி வாழலாம்.

3ம் நிலை வெளிநாட்டவர்களுக்கு எப்போது அனுமதி தேவை?

  • நீங்கள் மேலே குறிப்பிட்ட வற்றில் அடங்காது உங்களுக்கு அந்த வீட்டில் வாழ விருப்பமில்லாமல் இருப்பின், அல்லது நீங்கள் அதனை முதலீடு செய்ய அல்லது வீடு போதாமை இருப்பின் உங்களுக்கு ஒரு அனுமதியை பெறவேண்டி எற்படும்.
  • சுவிற்சலாந்து அரசாங்கத்தின் படி 3ம் நிலை பிரஜைகள் ஒரு விடுமுறை குடிமனை, வீடு, அல்லது ஒரு கட்டிடத்தில் உள்ள வீடு, அல்லது இரண்டாவது வீடு தேவையெனில் ஒரு அனுமதி தேவையாகும்.
  • இங்கு தான் லெக்ஸ் கொல்லர் விதி வருகிறது. இந்த லெக்ஸ் கொல்லரரே நீங்கள் வீடு வாங்குவதற்கு தேவையான சட்டரீதியான நடைமுறைகள் வீடு, குடிமனைகளை வாங்க உதவும்.

ஒரு அனுமதியைப் பெறுவது எப்படி?

  • இது ஒரு கன்டோனினால் நடைமுறைப்படுத்தபடுகிறது. இதை நீங்கள் ஒரு கன்டோன் காணி பதிவு அலுவலகத்தில் மேதிக விபரங்களாக பெறலாம்.
  • இதற்கு உங்கள் நகரசபை இலக்கத்தினை குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்.
  • லெக்ஸ் கொலர் மிகவும் கடினமானது விளக்குவதற்கு காரணம் இ்ங்கு அநேக விலக்குகளும் நிபந்தனைகளும் உண்டு. சிறந்த திட்டம் நீங்கள் ஒரு சட்டத்தரணி அல்லது ஒரு சொத்துக்கள் ஆலோசகருட்ன இதனைப்பற்றி அறியலாம்.

வர்த்தக சொத்துக்களை கட்டிடங்களை வாங்க என்ன செய்தல் வேண்டும்.

  • பொதுவாக வெளிநாட்டவரக்ள் வர்த்தக காணிகளை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கிட்டடியில் சட்ட விவகாரக் குழு சில சந்தர்ப்பங்களில் சுவிற்சலாந்தில் வர்த்தக காணிகளை வாங்க தடைவிதித்தது.

சட்டங்கள் மாறுபடுமா?

  • சட்டங்களை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், விரைவில் இவற்றிற்கு இடமிருப்பதாக தெரியவில்லை. மேலும் வர்த்தக சொத்துக்கள் மற்றும் கட்டிடங்களை வாங்க 2017 முற்பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு சுவிற்சலாந்தில் மாற்றங்களை செய்திருக்கலாம்
  • தற்போதைய சட்ட கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளை மூடுவதற்கான ஒரு வழியாக வர்த்தக சொத்துக்களை வாங்குவதற்கும் காணி சொத்து நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை இந்த திட்டங்கள் பரிந்துரைத்தன.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!