வெள்ளைப்பூண்டு மோசடி: மற்றுமொருவரைக் கைது செய்த சிஐடி
#Arrest
#Police
Prathees
4 years ago
அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மற்றுமொருவர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பம்பலப்பிட்டியை சேர்ந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோமான முறையில் விடுவிக்கப்பட்ட 54,000 கிலோ வௌ்ளைப்பூண்டு கன்டேனர் இரண்டையும் கொள்வனவு செய்தமைக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் நாளை வெலிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.