சுழிபுரத்தில் 19 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
#Jaffna
#Suicide
Yuga
4 years ago
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த யுவதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதி தற்கொலை செய்தமைக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை.
ஜெகதீஸ்வரன் டினுசியா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்