உலகின் மிக பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
#SriLanka
Yuga
3 years ago

உலகிலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான EVER GREEN − EVER ACE கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் இன்று (06) காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்காசியாவில் இந்த கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது விசேட அம்சமாகும்.
இந்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 23,993 கொள்கலன்களை ஒரே நேரத்தில் கொண்டு செல்ல முடியும்



